பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
88/ '15
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கைச் சட்டக் கல்லூரியின் கற்கை நடவடிக்கைகளும் பரீட்சை நடவடிக்கைகளும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெறுகின்றதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரி மாணவர்களின் பரீட்சை வினாத் தாள்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததால் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்களுக்கு திடீரென ஆங்கில மொழிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டமையால் அம் மாணவர்களுக்கு பெரும் அநீதியும் சிரமமும் ஏற்பட்டதென்பதையும்;
(ii) இந்த விடயத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் அரச கரும மொழிக் கொள்கையை மீறியுள்ளாரென்பதையும்;
அவர் மேலும் அறிவாரா?
(இ) இனி வரும் காலங்களில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வினாத் தாள்கள் அரச கரும மொழிக் கொள்கைக்கமைய, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்குவாரா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-03
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-12-02
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks