E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0171/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 171/'15

       

      கெளரவ டலஸ் அழகப்பெரும,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 'தயட்ட கிருள' அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் செயற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 2015 சனவரி மாதம் தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ள தென்பதையும்;

      (ii) இவ்வருடத்தில் நடைபெற்ற ஒரேயொரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், அவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத்தின் அரசியல்வாதிகளும் உத்தியோகத்தர்களும் வலியுறுத்தினர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) உத்தேசிக்கப்பட்ட இடத்தில், மாத்தறை புதிய நகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எத்திகதியில் என்பதையும்;

      (iii) இன்றேல், ஏன் என்பதையும்;

      (iv) மாத்தறை புதிய நகர மண்டபத் தொகுதியின் நிர்மாணிப்புகள் ஆரம்பிக்கப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனில், எத்திகதியில் என்பதையும்;

      (vi) இன்றேல், ஏன் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-24

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-24

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks