E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0206/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 206/'15

      கௌரவ ஹேசா விதானகே,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் தோட்டங்களைச் சார்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்பாகவும், தோட்டங்களைச் சார்ந்த லயன் அறைகள் தொடர்பாகவும் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், தோட்டங்களைச் சார்ந்த வீடுகள், லயன் அறைகள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழ்ந்து வருகின்ற மக்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) இவர்களில் பாடசாலைக்குச் செல்கின்ற வயதைச் சோ்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுள் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) மின்சார வசதிகள் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் இல்லாத குடும்ப அலகுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவாரா?

      (ஆ) (i) தோட்டங்களைச் சார்ந்து வாழ்ந்துவருகின்ற தமிழ் மக்களின் பொது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் யாது என்பதையும்;

      (iii) தோட்டங்களைச் சார்ந்துள்ள மக்களின் லயன் அறைகளை மையமாகக் கொண்ட வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து இவர்களை முறைசார்ந்த வீடுகளில் குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய உத்தேசிக்கின்ற காலம் யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-03

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ பழனி திகாம்பரம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks