E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0304/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 304/ '15

      கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உலகத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. எம்மானு வேலுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளாரா என்பதையும்;

      (ii) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் இலக்க தீர்மானத்தின் கீழ் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பாக பெயரிடப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ள உலக தமிழர் ஒன்றியத்தின் மீதான தடையை அரசு நீக்கியுள்ளதா என்பதையும்;

      (iii) அவ்வாறு தடை நீக்கப்படுவதற்கு ஏதுவாக இருந்த காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) உலக தமிழர் ஒன்றியம், புலிப் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பாக கவலை தெரிவித்தோ அல்லது எதிர் காலத்தில் பயங்கரவாதத்துக்கு உதவுவதில்லை என்று உறுதியளித்தோ உள்ளதா என்பதையும்;

      (ii) தமிழ் ஈழம் என்ற பெயரில் இலங்கையினுள் தனி நாடொன்றை உருவாக்கும் நோக்கத்திலிருந்து விலகியுள்ளதாக தந்தை எஸ்.ஜே. எம்மானுவேல் பிரகடனப்படுத்தியுள்ளாரா என்பதையும்;

      (iii) இலங்கையினுள் தனி நாடொன்றை உருவாக்குவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவிகள் அல்லது ஒத்துழைப்பு வழங்குவது அரசியலமைப்பின் 157அ. உறுப்புரையை மீறுகின்றதும் தண்டனை பெறக்கூடியதுமான தவறொன்றாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) அவ்வாறான தவறொன்றைப் புரிபவருக்கு உதவுவதும் தவறாகும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-12

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-12

பதில் அளித்தார்

கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks