பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
309/ '15
கௌரவ ஹேஷா விதானகே,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு, புறக்கோட்டைக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக நிலையங்கள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிறுவனம் யாது;
(ii) இதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாது;
(iii) மேற்படி பணத்தை ஈடுபடுத்திய நிறுவனம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் மொத்த எண்ணிக்கை யாது;
(ii) வர்த்தகர்களுக்கு கையளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(iii) தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் உழைக்கும் மாதாந்த மொத்த வருமானம் யாது;
(ii) கருத்திட்டத்தினால் நஷ்டம் ஏற்படுகின்றதாயின், குறித்த மாதாந்த நஷ்டம் யாது;
(iii) தற்போது இந்த கருத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;
(iv) தோல்விகண்டுள்ளதாயின், இதற்கு ஏதுவாயமைந்த காரணிகள் யாவை;
(v) இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேச வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா;
(vi) ஆமெனில், குறித்த வேலைத்திட்டம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-01-27
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks