பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
311/ '15
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2000.11.29 ஆந் திகதி திருகோணமலை பிரதேச கடல் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி "துஷாரி" எனப்படும் மீன்பிடிப் படகு அழிவடைந்து, அதிலிருந்த மீனவர்கள் காணாமற்போனார்கள் என்பதையும்;
(ii) கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஜீ. பியசேன, தமது ධීජදෙ/සැ/02/06ඩීආර් ஆம் இலக்க 2003.01.10 ஆம் திகதிய கடிதத்தில், மேற்படி சம்பவம் உண்மையானதெனவும், குறிப்பிட்ட மீனவர்களின் தங்கிவாழ்வோருக்கு நஷ்டஈடு வழங்குவது உகந்ததெனவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதையும்;
(iii) காணாமற்போயுள்ள மீனவர்களில் குமாரகே தொன் பியரத்ன என்பவருக்கு இதுவரையில் நஷ்டஈடு அல்லது மரணச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரு. பியரத்னவின் விதவையான மனைவி, திருமதி கே.எம். பிரிஜெட் காந்தி, முன்னாள் சனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சருக்கு எழுத்து மூலமாக மேன்முறையீட்டை சமர்ப்பித்த போதிலும், இது தொடர்பில் நியாயமான நடவடிக்கையெதுவும் மேற்கொள்ளப்படாமை பாரியதோர் அநீதியாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(ii) ஆமெனில், இவருக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கும், மரணித்த கணவருடைய மரணச் சான்றிதழை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks