E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0414/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 414/ ’16

       

      கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும்  தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)      2015.01.08 ஆந் திகதி தொடக்கம் 2015.12.31 ஆந் திகதி வரை முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு, பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக பொலிசு நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID)  கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;

        (ii)  மேற்படி (i) இன் பிரகாரம் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் பெயர்களை சபையில் சமர்ப்பிப்பாரா;

        (iii)  பொலிசு நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை  உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;

        (iv)  இப்புலனாய்வுகளின் முன்னேற்றம் தனத்தனியாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ)  இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2016-03-23

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks