பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
560/ '16
கௌரவ எஸ். சிறீதரன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) வட்டக்கச்சி பிரதேசத்தில் அரச கமத்தொழில் பண்ணை மற்றும் கமத்தொழில் கல்லூரி ஒன்று அமைந்துள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்தப் பண்ணையின் மேட்டுநிலம் மற்றும் வயல் நிலத்தின் பரப்பளவு ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) தற்போது அந்தப் பண்ணை எவரால் நிர்வகிக்கப்படுகின்றது; அதனைப் பயன்படுத்துபவர்கள் யாவர் என்பதையும்;
(iv) உரிய திணைக்களத்திற்கு அந்த பண்ணையை ஒப்படைப்பாரா என்பதையும்;
(v) மீண்டும் அதில் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு அதனை இயங்கச் செய்யும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) வட்டக்கச்சி கமத்தொழில் பண்ணையுடன் உள்ள கமத்தொழில் கல்லூரியை இயங்க வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) வவுனியா மற்றும் குண்டசாலையில் உள்ள கமத்தொழில் கல்லூரிகளுக்கு நிகரான வகையில் இது இயங்கியது என்பதையும்;
(iii) மீண்டும் அதே போன்று இயங்கவைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) திணைக்களத்துக்கு ஒப்படைத்து அதனை இயங்கவைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks