E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0860/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை இராணுவத்தின் 06 ஆம் பீரங்கிப் படையணியில் 65954 ஆம் இலக்கத்தின் கீழ் பணியாற்றும் திக் எல்ல லேகம்கே சமித் அஞ்சுல குமார லேகம்கே எனும் உத்தியோகத்தர் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியுள்ளார் என்பதையும்;

      (ii) இவர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

      (iii) இதன் காரணமாக பாதிக்கப்பட்ட இவரது மனைவியான ஸ்ரீமாலி லசந்திகா நவரத்ன என்பவருக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி உத்தியோகத்தர் சம்பந்தமாக விசாரணையொன்று நடத்தப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எப்போதிருந்து என்பதையும்;

      (iii) ஸ்ரீ மாலி லசந்திகா நவரத்ன என்பவருக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக அவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு இராணுவம் தலையிடுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks