பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
896/'16
கெளரவ இம்ரான் மஹ்ரூப்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத் தொகை, ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி பணத் தொகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) பிரதேச செயலகங்களுக்கு அமைய ஒதுக்கப்பட்ட பணத் தொகை வருட அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்களுக்கு முறைசார்ந்த கொள்வனவு நடைமுறை பின்பற்றப்படாமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா என்பதையும்;
(ii) மேற்படி ஆண்டுகளில் இது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி நிதி ஒதுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி மாற்றங்கள் யாவை என்பதையும்;
(iii) வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-12
கேட்டவர்
கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks