E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0921/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2011 சனவரி முதல் 2015 சனவரி வரையிலான காலப்பகுதியில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் சம்பந்தமாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு விசாரணையினதும் முன்னேற்றம் யாதென்பதையும்;

      (iii) மேற்படி ஊழல் மற்றும் மோசடிகளுடன் அமைச்சின் உத்தியோகத்தர்கள் தொடர்புபட்டுள்ளார்களென இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், இவர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks