E   |   සි   |  

 திகதி: 2017-01-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1006/ 2017 - கௌரவ உதய கம்மன்பில, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1006/ '16

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (​i) இலங்கையில் தமிழ் ஈழம் என்ற பெயரில் தனி நாடொன்றை உருவாக்குவதை தமது பிரதான நோக்கமாகக் கொண்ட, சர்வதேச ரீதியாக வியாபித்துள்ள தமிழ் ஈழ அரசாங்கம் என்ற பெயரிலான அரசாங்கமொன்றும், 135 உறுப்பினர்களை கொண்ட தமிழ் ஈழ சட்டவாக்கசபை என்ற பெயரிலான பாராளுமன்றமும், விஸ்வநாதன் உருத்ரகுமாரன் என்ற நபர் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் பதவியொன்றும் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அரசுகள் தமிழ் ஈழத்தை சட்ட ரீதியானதொரு நாடாக தமது இணையத் தளங்களில் பகிரங்கப்படுத்தி உள்ளதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) திபெத் மற்றும் தமிழ் ஈழம் தவிர்ந்த இவ்வாறான நிலத் தொடர்பற்ற வேறு அரசாங்கங்கள் உள்ளனவா என்பதையும்;

      (ii) மேற்படி சட்ட விரோத அரசாங்கம், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முனைப்புடன் இயங்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-01-25

பதில் அளித்தார்

கௌரவ மங்கள சமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks