E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1066/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2015 - 2020 செயற்பாட்டுத் திட்டத்தில் புகையிரத இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி திட்டம் செயற்படுத்தப்படாதெனில், மாற்றுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சர்வதேச போட்டி ரீதியிலான விலைமனுக் கோரலின்றி இந்தியாவிலிருந்து புகையிரத இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) இந்தியாவில் புகையிரத இயந்திரங்களை உற்பத்தி செய்கின்ற கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iv) சர்வதேச போட்டி ரீதியிலான விலைமனுக் கோரல் மேற்கொள்ளப்படாமை நல்லாட்சி கோட்பாட்டுக்கு அமைவானதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-05

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-05

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks