E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1132/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) டாக்டர் நெவில் பர்னாந்து முதலீட்டுத் தனியார் கம்பெனிக்கு உயர்கல்வி நிறுவனமொன்றை ஆரம்பிக்க இலங்கை முதலீட்டுச்சபை அனுமதி வழங்கியுள்ளதா;

      (ii) ஆமெனில், அது எத்தகைய பட்டங்களை வழங்குவதற்காக;

      (iii) அந்நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட திகதி யாது;

      (iv) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா;

      (v) இலங்கையினுள் தாதியர் பட்டம் மற்றும் சுகாதார விஞ்ஞான பட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரம் அளிக்கையில் சுகாதார அமைச்சின் முன்னனுமதி பெறப்படல் வேண்டுமென்ற நிபந்தனையை மேற்சொல்லப்பட்ட கம்பெனி நிறைவேற்றி உள்ளதா;

      (vi) ஆமெனில், சுகாதார அமைச்சின் மேற்படி அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தை சபையில் சமர்ப்பிப்பாரா;

      (vii) இன்றேல், முதலீட்டுச் சபையுடனான இணக்கப்பாட்டினை மீறிய அக்கம்பெனிக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-23

பதில் அளித்தார்

கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks