E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1177/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) உள்நாட்டு விமானப் பயணங்கள் பற்றி அரசாங்கத்தின் திட்டவட்டமான கொள்கையொன்று காணப்படுகின்றதா என்பதையும்;

      (ii) இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்களை இலவசமாக பயன்படுத்துவதற்கு உரித்துடைய அரசாங்க பதவி வகிப்பவர்கள் யாவர் என்பதையும்;

      (iii) இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்களை இலவசமாக பயன்படுத்துவதற்கு உரித்துடைய அரசாங்க நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iv) அரசாங்க பணத்தில் உள்நாட்டில் விமானப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய பதவிகளை வகிப்பவர்கள் யாவர் என்பதையும்;

      (v) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2016.10.31 ஆம் திகதி வரையான காலத்தில் அரசாங்க பணத்தில், அரச கூட்டுத்தாபன அல்லது நியதிச் சபைகளின் பணத்தில், அரசாங்க கம்பனிகளின் பணத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்ட அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர்கள், இவர்கள் உள்நாட்டு விமானப் பயணங்களில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள், இவ்வாறு விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான காரணங்கள் மற்றும் இப்பயணங்களுக்கான செலவுகள் தனித்தனியே யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-24

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks