E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1204/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 1983 ஆண்டளவில் அம்பாறை மாவட்டத்தினுள் காணப்பட்ட,

      (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;

      (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;

      (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

      எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

      (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-20

பதில் அளித்தார்

கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks