E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1304/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. கௌரவ டலஸ் அழகப்பெரும,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கம்புறுபிட்டிய, கரபுட்டுகல, "ஆரிய இல்லத்தில்" வசிக்கும் திரு. தில்லிமுனி உபாலி தனக்குரிய காணியொன்றின் நிர்ணயித்துக் கொள்வதற்கான சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக சட்ட ஆலோசனை ஆணைக்குழுவின் மாத்தறை அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார் என்பதையும்;

      (ii) சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக தேவைப்படும் பிரச்சினைக்குரிய காணியின் உறுதிப்பத்திரம் மூல வரைபடம் காணி விபரப் பதிவேடு உட்பட மேலும் பல கடிதங்களின் மூலப்பிரதிகள் மேற்கூறிய அலுவலகத்துக்கு ஒப்படைத்துள்ளார் என்பதையும்;

      (iii) தனக்கு தொடர்ந்தும் சட்ட உதவிகளோ ஆலோசனைகளோ தேவையில்லை என்றும், நீதிமன்ற நடவடிக்கையை நாடுவதற்கான அவசியம் கிடையாது என்பதனால், ஒப்படைக்கப்பட்ட கடிதக் கோப்பை மிண்டும் தனக்கு தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதையும்;

      (iv) எனினும், இதுவரை கடிதக் கோப்புகள் வழங்கப்படுவதை அல்லது எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பதை சட்ட உதவி ஆணைக்குழுவின் மாத்தறை பிரதேச அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) திரு. உபாலியினால் ஒப்படைக்கப்பட்டுள்ள கடிதக் கோப்பை மீண்டும் அவருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks