E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1306/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. கௌரவ டலஸ் அழகப்பெரும,— தொழில், தொழில் சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்புத் தொகை செலுத்துவதற்காக மாத்தறை மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iii) ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள மாத்தறை மாவட்டத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iv) ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்து கொள்வதற்காக காணப்படவேண்டிய குறைந்தபட்ச நிலைமைகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்? 

கேட்கப்பட்ட திகதி

2017-05-25

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-25

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks