E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1312/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. 1312/ '16

      கெளரவ எம்.எச்.எம். சல்மான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாது என்பதையும்;

      (ii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் வசிப்பவர்கள் அரசாங்க காணிகளை அளிப்புப் பத்திரத்தின்/அனுமதிப்பத்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்களா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி கோரிக்கைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) மேற்படி விண்ணப்பதாரர்களுக்கு இற்றைவரை அளிப்புப் பத்திரத்தின்/ அனுமதிப்பத்திரத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-05

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-05

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks