E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1379/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. கௌரவ பந்துல குணவர்தன,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 134 ஆம் முன்மொழிவுக்கு அமைவாக, சமுர்த்தி பயனுகரிகளுக்கு விநியோகிப்பதற்காக 44000 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவு செய்யப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எந்த விலையில் எத்தரப்பிடமிருந்து என்பதையும்;

      (iii) மேற்படி முன்மொழிவை நடைமுறைப்படுத்தல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவினம் யாதென்பதையும்;

      (iv) 44000 மெற்றிக் தொன் அரிசியானது சமுர்த்தி பயனுகரிகளுக்கு மத்தியில் விநியோகிகப்பட்ட விகிதம் யாதென்பதையும்;

      (v) அரிசி விநியோகிக்கப்பட்ட காலப் பகுதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks