E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1389/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. கௌரவ பந்துல குணவர்தன,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 141 ஆம் இலக்க முன்மொழிவுக்கமைவாக, உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு பக்கெற்றிற்கு ரூபா 30/- மானியம் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) மேற்படி பால் உற்பத்திக்கான மானியத்தின் சார்பில், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் நிதி ஏற்பாடு பயன்படுத்தப்பட்ட விதத்தை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;

      (iii) பால் உற்பத்திக்கான மானியமானது எந்த அமைச்சின் ஊடாக எந்த நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதென்பதையும்;

      (iv) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கையில் பால் உற்பத்தியானது ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை மில்லியன் லீற்றர்கள் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-08

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks