பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 வரவு செலவுத்திட்டத்தின் 171 ஆம் முன்மொழிவின் பிரகாரம், கிராமியப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்துக்காக, ஒரு கிராமத்துக்கு ரூபா 1.5 மில்லியன் வரையில், ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட, ரூபா 21,000 மில்லியன் நிதி ஏற்பாடு 2016 ஆம் ஆண்டில் பகிர்ந்தளிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் குறிப்பிட்ட ஒவ்வொரு கிராமத்திலும் பூர்த்தி செய்யப்பட்ட கருத்திட்டங்கள் பற்றிய விபரமான பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;
(ii) மேற்படி 14022 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மேற்குறிப்பிடப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்திய அதிகாரம்பெற்ற நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட அதிகாரிகள் இக்கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டினுள் பெற்றுக்கொண்டுள்ள நிதித்தொகையைக் காட்டும் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;
(iii) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், ஒரு கிராமத்துக்கு ரூபா 1.5 மில்லியன் வீதமான நிதி ஏற்பாட்டை பெற்றுக்கொள்ளாத அல்லது அதில் ஒரு பகுதியை மாத்திரம் பெற்றுக்கொண்ட கிராம அலுவலர் பிரிவுகளின் பட்டியலை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-10
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-23
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks