பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1400/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2016 வரவு செலவுத் திட்டத்தின் 172 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், வவுனியாவில் புதிய பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 200 மில்லியன் நிதி ஏற்பாடு 2016 ஆம் ஆண்டினுள் செலவிடப்பட்ட விதம் பற்றிய விபரமான செலவுப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;
(ii) உங்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மேற்படி நிதியில் 2016.03.31 ஆம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட அமைச்சுக்கு விடுவிக்கப்பட்ட நிதித் தொகை யாது;
(iii) மேற்படி பொருளாதார வலயத்துக்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்படுகையில் அல்லது அதற்குப் பின்னர் இக்கருத்திட்டம் பற்றிய சாத்தியவள அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டதா;
(iv) ஆமெனில், அதனை சமர்ப்பிப்பாரா;
(v) இன்றேல், ஏன்;
(vi) 2016 ஆம் ஆண்டினுள் இந்த முக்கியமான கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு, ஏற்புடைய மாகாண சபையிலிருந்து முழுமையான அனுசரணையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-21
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-21
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks