பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் 180 ஆம் இலக்க பிரேரணைக்கேற்ப, 2018 ஆம் ஆண்டில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியினை அமெரிக்க டொலர் 2 பில்லியன் வரை உயர்வடையச் செய்வதற்காக ஏதேனும் திட்டவட்டமான ஏற்றுமதி மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டதா என்பதையும்,
(ii) ஆமெனில், அது யாரால் என்பதையும்,
(iii) இலங்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை ரூபா 2 பில்லியன் வரை உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்பு மற்றும் அனுசரணைகள் பற்றி தெளிவுபடுத்துவாரா என்பதையும்,
(iv) 2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கைக்கும் மடகஸ்காருக்குமிடையில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக உருவாகியுள்ள போக்குகளை காட்டும் புள்ளிவிபரக் குறிப்புகளையும் மற்றும் விபரங்களையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்,
(v) 2016 ஆம் ஆண்டில் இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியின் ஊடாக ஈட்டிக்கொண்ட மொத்த வௌிநாட்டுச் செலாவணியின் அளவு யாதென்பதையும் மற்றும் அதற்கு பங்களிப்பு வழங்கிய பிரதான ஏற்றுமதியாளர்கள் 20 பேர் யாரென்பதையும்.
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-09
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-02
பதில் அளித்தார்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks