E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1411/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 1411/ '16

      கௌரவ பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் 179 ஆம் இலக்க முன்மொழிவின் படி, இறக்குமதி செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு விதிக்கப்பட்ட 10% செஸ் வரியின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வரி வருமானம் எவ்வளவு;

      (ii) குறிப்பட்ட செஸ் வரியை உள்நாட்டு கலைஞர்களை பேணுவதற்கு ஈடுபடுத்திய முறை யாது;

      (iii) 1977 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு வருடத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆபரணங்களின் பெறுமதி மற்றும் பிரதான இறக்குமதியாளர்கள் 20 பேர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிப்பாரா;

      (iv) இலங்கைக்கு ஆபரணங்கள் இறக்குமதி செய்யப்படுமாயின், அவற்றின் பிரதான வழங்குனர்கள் யாவர்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-15

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks