பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1427/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 203 வது பிரேரணைக்கு அமைய, 2016 ஆம் ஆண்டில் உராய்வு நீக்கி எண்ணெய்க்கான சந்தை திறந்துவிடப்பட்டதா என்பதையும்;
(ii) அதன்படி உராய்வுநீக்கி எண்ணெய்ச் சந்தையில் பிரவேசித்த புதிய வழங்குனர்கள் யாவர் என்பதையும்;
(iii) 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கையில் உராய்வுநீக்கி எண்ணெய் வழங்கல் கம்பனிகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள தேறிய இலாபம் ஒவ்வொரு கம்பனிக்கமைய மற்றும் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரியதாக இருந்த உராய்வு நிக்கி எண்ணெய் ஏகபோக உரிமையை இல்லாமற்செய்வதற்காக அன்றிலிருந்து இன்றுவரை அரசாங்கம் பின்பற்றிய மூலோபாயங்கள் யாவையென்பதையும்;
(v) 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இந்திய ஒயில் கம்பனி விற்பனை செய்த உராய்வுநீக்கி எண்ணெயின் அளவு மற்றும் அவற்றின் விற்பனை மூலம் மாத்திரம் பெற்ற வருடாந்த இலாபம் ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-02-20
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks