E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1475/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையினால் இலவச பேருந்து பயண அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள அரச அலுவலர்கள் மற்றும் பிற ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) இவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் வதியும் மாவட்டங்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு அரச நிறுவனத்தாலும் இதற்கென இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மாதாந்தம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்தின்படி தனித்தனியாக யாதென்ன்பதையும்;

      (iv) மேற்படி இலவச பயண அனுமதிச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும் பயண வழிக்கு ஏற்புடையதாக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ள டிப்போக்களுக்கு குறித்த பணத்தை நேரடியாக வழங்கக்கூடிய வழிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) இ.போ.ச. பஸ் வண்டிகளைத் தரித்து வைத்தல், ஓட்டத்தில் ஈடுபடுத்தல் மற்றும் ஏனைய பணியாளர்களின் பிரச்சினைகளின் போது இலங்கை போக்குவரத்துச் சபை மௌனம் காக்கும் கொள்கையை பின்பற்றுவதை அறிவாரா என்பதையும்;

      (vi) இ.போ.ச. பணியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks