E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1503/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் சிறுவர் சனத்தொகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி எண்ணிக்கையை தீர்மானிக்கின்ற முறையியல் யாதென்பதையும்;

      (iii) இலங்கையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை சிறுவர் சனத்தொகையில் எத்தனை சதவீதம் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி அ (i) இல் குறிப்பிட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, சமூகத்தின் ஒவ்வொரு வருமான மட்டங்கள் வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

      (ii) இலகுவாகவே நோய்களுக்கு உள்ளாவதால் மரணிப்பதாக அறியவந்துள்ள போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks