E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1544/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரத்தில் வசிக்கும், மூன்று பிள்ளைகளின் தாயான சுஜானி என்ற பெண் குவைட் நாட்டில் சேவையாற்றிய சமயம் மிக கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரென்பதையும்;

      (ii) மேற்படி கொடூர சித்திரவதை காரணமாக முண்ணான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இவர் தற்சமயம் குவைட்டிலுள்ள அடான் வைத்தியசாலையில் 17 ஆம் வாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) முண்ணான் பாதிக்கப்பட்டமையால் முடங்கிய நிலையில் உள்ள இப்பெண் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வரப்படுதல் வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், இவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையுடன் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks