E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1571/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

    1. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பாக,

      (i) அதிபர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பதவியணியையும்;

      (ii) தற்போதைய அதிபர்களின் பெயர்களை அவர்களின் தரத்துடனும்;

      (iii) பகிரங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பேரில் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ள அதிபர்களின் பெயர்களையும்;

      (iv) பகிரங்க சேவை ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்படாதுள்ள நியமனங்களைக் கொண்டிருக்கும் அதிபர்களின் பெயர்களையும் அந்த நியமனங்களை அங்கீகரித்த அலுவலரின் பெயரையும்;

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) (i) பகிரங்க சேவை ஆணைக்குழுச் செயலாளரால் அன்றி தேசிய பாடசாலைகளில் உள்ள அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவது ஒழுங்கு முறையாகுமா என்பதையும்;

      (ii) அதை சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்

      (iii) அவ்வாறெனில் எப்போது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு மேலும் தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-19

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-19

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks