E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1589/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. கௌரவ பிமல் ரத்நாயக்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குருணாகல் தொடக்கம் ஹபரன வரை புதிய புகையிரத வீதியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், திட்டம் தயாரிக்கப்பட்ட வருடம் மற்றும் அது தொடர்பாக முன்னிலை வகித்த தொழில்நுட்பவியலாளர்கள் யாவர்;

      (iii) அத்திட்டத்தின்படி பாதிப்புக்குள்ளாகும் மத நிலையங்கள், அரச கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      (iv) இதன் ஆரம்பத் திட்டம் இப்பாகமுவ, தம்புள்ள பிரதேசங்களில் மாற்றப்பட்டதா;

      (v) ஆமெனில், அம்மாற்றம் செய்யப்பட்ட வருடம் யாது;

      (vi) இது பற்றி ஏற்புடைய மக்களுக்கு அறிவிக்கப்பட்டதா;

      (vii) ஆமெனில், அது எக்காலத்தில்;

      (viii) அம்மக்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரப்பட்டதா;

      (ix) இம்மாற்றத்தை செய்வதற்கான காரணம் யாது ;

      (x) இம்மாற்றத்துக்கு உட்பட்ட நீளம் எவ்வளவு;

      (xi) ஆரம்பத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் திட்டத்தினால் இப்பாகமுவ, தம்புள்ள பிரதேசங்களில் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு வெவ்வேறாக எவ்வளவு;

      (xii) இரண்டாம் திட்டத்தை தயாரித்த தொழில்நுட்பவியலாளர் குழு உறுப்பினர்கள் யாவர்;

      (xiii) இவ்விரு திட்டங்களையும் தயாரிப்பதற்கு இதுவரை செய்யப்பட்டுள்ள செலவினங்கள் வெவ்வேறாக யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-08

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-08

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks