E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1622/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. கௌரவ ஹேஷான் விதானகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் சீனித் தேவையைப் பூர்த்தி செய்கையில் செவனகல சீனித் தொழிற்சாலை மிக முக்கியமானது என்பதையும்;

      (ii) அதன் மூலம் பெருந்தொகையான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன என்பதையும்;

      (iii) தற்போது இத்தொழிற்சாலையை சார்ந்ததாக வழங்கப்பட்டுள்ள காணிகளில் விவசாயிகள் கரும்புச் செய்கையை மேற்கொள்ளாது வேறு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) செவனகல சீனித் தொழிற்சாலை சார்ந்ததாக கரும்புச் செய்கைக்கென விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் ஹெக்டயார் பரப்பளவு எவ்வளவு;

      (ii) தற்போது கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காணியின் ஹெக்டயார் பரப்பளவு எவ்வளவு;

      (iii) நாளுக்கு நாள் கரும்பு விவசாயி வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுவருவதால் இத்தொழிற்சாலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் உற்பத்தியைப் பெற்றுக்காள்ள முடியாது போகலாம் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (iv) ஆமெனில், இத்தொழிற்சாலையிலிருந்து அதிக உற்பத்தியைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks