பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1633/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 1633/ '17

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு சொந்தமான வலுசக்தி உற்பத்தி மூலங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு வலுசக்தி மூலத்திலிருந்தும் நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு கிடைக்கும் வருடாந்த வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) தற்போது நிலைபெறுதகு சக்தி நிதியத்தின் வசமுள்ள நிதியத்தின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி நிதியம் வைப்புச் செய்யப்பட்டுள்ள வங்கி/நிதி நிறுவனம் யாதென்பதையும்;

      (v) மேற்படி நிதியத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களுக்காக அது உரிய வகையில் பயன்படுத்தப்படுகின்றதென திருப்தியடைகின்றாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-11

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks