E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1634/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுண்ணாகம் பிரதேசத்தில் 10 மெகாவொட் வீதம் இரண்டு காற்று மின்சக்தி நிலையங்களை நிருமாணிப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் கேள்விப்பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) மேற்படி கேள்விப்பத்திரங்கள் வழங்கப்பட்ட இரண்டு கம்பனிகளும் யாவையென்பதையும்;

      (iv) மேற்படி கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட விலைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (v) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks