E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1648/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1648/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் தற்போது இயங்கும் பீடங்கள் மற்றும் திணைக்களங்கள் யாவையென்பதையும்;

      (ii) அந்த ஒவ்வொரு பீடத்தினாலும் நடத்தப்படும் தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) தற்போது இங்கு பணிபுரியும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு திணைக்களத்திற்கமைய வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iv) இந்தப் பல்கலைக்கழகத்தில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-27

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks