E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1666/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1666/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) ​மேற்படி மருத்துவமனைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

      (iii) ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை வழங்கியுள்ள மருத்துவமனை சிற்றூழியர் தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) மேற்படி தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்ட மருத்துவமனைகள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு பின்பற்றப்பட்ட முறையியல் யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks