E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1672/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. கௌரவ ரீ ரஞ்சித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இத்தடவை பயிர்ச்செய்கை போகத்தின்போது இலங்கையில் நெல் பயிரிடப்பட்ட முழு நிலப்பரப்பின் அளவு எவ்வளவென்பதையும்;

      (ii) நிலவும் கடும் வறட்சி காரணமாக பயிர்ச் சேதமடைந்த காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iii) வறட்சியினால் நாட்டுக்கு இழக்க நேரிடுமென மதிப்பிடப்பட்ட நெல்லின் அளவு எத்தனை மெட்ரிக் தொன்கள் என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு எதிர்பார்க்கும் நிவாரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) அதற்காக கமத்தொழில் அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அப்பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks