E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1691/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மானிய விலையில் உரம் வழங்கும்போது, விவசாயிகள் 50 கிலோகிராம் உரத்திற்கு வயல் காப்புறுதிக்காக ரூபா 150/- வீதம் செலுத்தியுள்ளனர் என்பதையும்;

      (ii) மேற்படி காப்புறுதிப் பணத்தை செலுத்தியுள்ள விவசாயிகள், வயல்கள் சேதமடைந்த போது அதற்கான இழப்பீட்டுத் தொகையை இலகுவாகவே பெற்றுக்கொண்டனர் என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி காப்புறுதிப் பணத்தொகையை அறவிடும் முறையியல் செயற்படுத்தப்படுவதில்லை என்பதையும்;

      (iv) அண்மைக்காலமாக தொடர்ந்து ஏற்படுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக நெற் செய்கைக்கு ஏற்படுகின்ற பாரிய சேதங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகளை செலுத்துவதற்கு ஏதேனும் முறையியல் உள்ளதா என்பதையும்;

      (ii) முன்னர் காணப்பட்ட விதத்தில் வயல் காணிகள் காப்புறுதி போன்ற கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-06

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-06

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks