பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க காணிகளில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் குடியிருக்கின்ற ஆட்களுக்கு உரித்து உறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதென்பதையும்;
(ii) 2016.10.27 ஆம் திகதி பிரதம அமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்ட நடுத்தர கால பொருளாதார நோக்கு பற்றிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மூலம் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) 2015.01.08 ஆம் திகதிக்கு பின்னர் உரித்து உறுதிகள் வழங்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) தற்சமயம் உரித்து உறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக இனங்காணப் பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவிகளின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டுகளில் அரசாங்கத்தினால் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவிகளின் அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;
(v) தேசிய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான மேற்படி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(vi) ஆமெனின், மேற்படி வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-19
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-19
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks