பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையர்களினால் உலகில் பல்வேறு நாடுகளிலும் பேணிவரப்படும் வங்கிக் கணக்குகள் பற்றி 2016 யூலை மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் வினாவொன்றை எழுப்பினேன் என்பதையும்;
(ii) அவ்வினாவிற்கான அனைத்து தகவல்களையும் ஆராய்ந்தறிந்து இச்சபைக்கு அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) வினாவை எழுப்பி தற்போது அதிக காலம் கடந்த நிலையிலும் அதற்கான விடையை சமர்ப்பிப்பதற்கு இயலாமல் போயுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) உலகின் பல்வேறு நாடுகளிலும் இலங்கையர்களினால் பேணிவரப்படுகின்ற வங்கிக் கணக்குகள் பற்றி முழுமையான அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டதா என்பதையும்;
(iii) எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாயின் அதற்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-25
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks