E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1773/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. கௌரவ விஜித ஹேரத்,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010.09.10 ஆம் திகதிய 1670/33ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை கணக்காளர் சேவை பிரமாணக் குறிப்பின்படி, அலுவலர்களை விசேட தரத்திற்குப் பதவி உயர்த்துகின்றபோது பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு முரணான வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) பட்டப்பின்படிப்புத் தகைமைகளைக் கொண்டிராத அலுவலர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், அந்த காலப்பகுதி யாது என்பதையும்;

      (iv) பகிரங்க சேவைகள் ஆணைக்குழு அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதா என்பதையும்:

      (v) குறித்த நேர்முகப் பரீட்சைக்காக 82 அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்தனரா என்பதையும்;

      (vi) இவர்களில், பகிரங்க சேவைகள் ஆணைக்குழு அங்கீகரித்த காலப்பகுதிக்குரிய அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும், அதன் கீழ் வராத அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (vii) இந்த அலுவலர்கள் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனரா என்பதையும்;

      (viii) ஆமெனின், அந்த பதவி உயர்வுகள் நடைமுறைக்கு வரும் திகதி யாது என்பதையும்;

      (ix) பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் விதிகளுக்குப் புறம்பாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்குமாயின், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அலுவலர்கள் யாவர் என்பதையும்;

      (x) இந்த அலுவலர்கள் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

      (xi) பதவி உயர்வு கிடைக்காததால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் சார்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-21

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks