E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1855/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 1855/ '17

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் மாநகர திட்டத்தின் (Megapolis Plan) கீழ் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னோக்கியுள்ள 3 ஆண்டுகள் வரையில் கடுவல பிரதேச செயலாளர் பிரிவிற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (ii) ஏற்கனவே, ஏதேனும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாயின், அவை யாவை என்பதையும்;

      (iii) ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டவட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள திகதிகள் யாவை என்பதையும்;

      (iv) இதற்கென அரச மற்றும் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனின், அவை தனித்தனியே யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள அல்லது ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) தற்சமயம் செலவிடப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) இதற்காக கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனின், கடன் பெற்றுக்கொள்ளப்படும் நிறுவனங்கள் மற்றும் கடன் தொகை எவ்வளவென்பதையும்;

      (v) இன்றேல், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் மேலும் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-20

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-20

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks