E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0461/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.

    1. 0461/’10

      கெளரவ நூர்தீன் மசூர்,— மீள் குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     வடமாகாணத்தில் குடியிருந்து தற்போது புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி, முந்தலம், வனாத்து வில்லுவ மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்வாரியாக இடம்பெயர்ந்தோரை பதிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கென உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்,

      (ii) இந்த ஒவ்வொரு வீடமைப்புக்குமாக செலவு செய்யப்பட்ட முழுத் தொகை யாதென்பதையும்,

      (iii) இக்குடியிருப்பாளர்களுக்கு வீடமைப்புக்கான நிதியுதவி வழங்குகையில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை யாதென்பதையும்,

      (iv) இது தவணை அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பின் ஒவ்வொரு தவணையிலும் வழங்கப்பட்ட தொகை யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இந்த உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்ட நபர்களின் பெயர், முகவரி, திகதி மற்றும் செலவுச் சீட்டு இலக்கம் ஆகியவற்றை பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-10-06

கேட்டவர்

கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks