E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2123/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 2123/'17

      கெளரவ ஜயந்த சமரவீர,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017.05.27 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்த நிலைமையினால் களுத்துறை மாவட்டத்தில் முழுமையாக, பகுதியளவில் மற்றும் சிறிதளவு சேதமடைந்துள்ள வீடுகள், மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் கிணறுகள் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி எண்ணிக்கை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) அவ்வாறு முழுமையாக சேதமடைந்த ஒரு வீட்டை, மலசலகூடத்தை மற்றும் கிணற்றை மீண்டும் நிர்மாணிக்க மற்றும் பகுதியளவில் மற்றும் சிறிதளவு சேதமடைந்த வீட்டை, மலசலகூடத்தை மற்றும் குடிநீர் கிணற்றை புனரமைப்பதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுவது உதவித் தொகையொன்றா அல்லது கடன் தொகையொன்றா என்பதையும், மேற்படி உதவி அல்லது கடன் தொகை எவ்வளவு என்பதையும் அவர் குறிப்பிடுவாரா என்பதையும்;

      (iv) தற்போது உதவி அல்லது கடன் வழங்கப்பட்டுள்ள முழுமையாக, பகுதியளவு மற்றும் சிறிதளவு சேதமடைந்துள்ள வீடுகள், மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் கிணறுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (v) அவ்வாறு உதவி அல்லது கடன் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் பெயர், முகவரி, கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு தனித்தனியே யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-01-24

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks