E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2188/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 2188/ '17

      கௌரவ பிரசன்ன ரணதுங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 ஆம் ஆண்டு மினுவங்கொட கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் அதற்கான பணத் தொகை வெவ்வேறாக யாது;

      (iii) மினுவங்கொட கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் பாதி வேலைகள் முடிவடைந்த கட்டிடங்கள் உள்ளனவா;

      (iv) ஆமெனில், அப்பாடசாலைகள் மற்றும் குறித்த கட்டிடங்கள் தொடர்பான விபரங்களை முன்வைப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மினு/மெத் விஜய மாதிரிப் பாடசாலை எனும் பெயரில் ஒரு புதிய பாடசாலையை மினுவங்கொட கல்விக் கோட்டத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

      (iii) 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலையொன்றை நிர்மாணிக்க இந்நிதி ஏற்பாடு போதுமானதா;

      (iv) இப்பாடசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் காலம் எவ்வளவு;

      (v) இதற்கான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படும் முறை யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks