பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1423/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உயர் டிஜிட்டல்மயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் 193 ஆம் இலக்க பிரேரணைக்கேற்ப ஒதுக்கப்பட்ட ரூபா 10,000 மில்லியன் நிதி ஏற்பாடு 2016 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட முறையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) மேற்படி வரவு செலவுத்திட்ட பிரேரணையின் மூலமாக நன்மைகளை பெற்றுக்கொண்ட ஆட்களின் அல்லது நிறுவனங்களின் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் பெற்றுக்கொண்ட நிதி ஏற்பாட்டுத் தொகையையும் பற்றிய விபரமான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட ஒதுக்கீடாகிய ரூபா 10,000 மில்லியன் பணத்தொகையில் செலவிட முடியாமற்போன பணத்தொகை 2017 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
அவர் இச்பைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-07
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks