E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0056/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 207 இல் "கடந்த அரசாங்கத்தின் கீழ் முறையற்ற அனுசரணை பெற்று, அதிக இலாபம் ஈட்டிய கம்பெனிகளுக்கு நாங்கள் உச்ச அனுகூல வரியை விதித்தோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவ்விதமாக முறையற்ற அனுசரணைகளைப் பெற்று அதிக இலாபத்தை ஈட்டி உச்ச அனுகூல வரியை செலுத்திய கம்பெனிகளின் பெயர்ப்பட்டியலும் அந்தந்த கம்பெனிகளால் செலுத்தப்பட்ட வரியின் அளவும் யாது;

      (ii) உச்ச அனுகூல வரியைச் செலுத்திய கம்பெனிகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசாங்க கருத்திட்டங்களுக்கு பங்களிப்பு செய்கின்றனவா;

      (iii) அக்கம்பெனிகளால் உச்ச அனுகூல வரி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புதிய முதலீட்டுக் கருத்திட்டங்கள் சம்பந்தமாக நிதி அமைச்சின் மூலம் தனித்துவமான அனுசரணை வழங்கப்பட்டுள்ளதா;

      (iv) உச்ச அனுகூல வரி செலுத்திய கம்பெனிகளில் பொலிஸ் நிதிசார் குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட கட்பெனிகள் யாவை;

      (v) நிதிசார் குற்ற விசாரணைக்கிணங்க உச்ச அனுகூல வரி செலுத்திய மற்றும் அதற்கு மேலதிகமாக வேறு அபராதத்தை செலுத்திய கம்பெனிகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks