E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0061/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 61/ '18

      கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மூலம் 2000 ஆம் ஆண்டில் 33.3% ஆகக் காணப்பட்ட இலங்கையின் வர்த்தகப் பொருள் ஏற்றுமதி 2014 ஆம் ஆண்டில் 17% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக மிகவும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதனால் 2000 - 2016 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட இறுதியிலும் பதிவு செய்யப்பட்டுள்ள,

      (i) இலங்கையின் பண்டங்களின் ஏற்றுமதி அளவு மற்றும் வருமானம்;

      (ii) இலங்கையின் பண்டங்களின் இறக்குமதி அளவு மற்றும் செலவினம்;

      (iii) வர்த்தக நிலுவை;

      ஆகியவற்றை ரூபா மற்றும் டொலர்களில் வெவ்வேறாகக் குறிப்பிடுவாரா என்பதையும்;

      (ஆ) (i) மேலே (அ) வில் (i), (ii) மற்றும் (iii) பெறுமானங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதங்களாக குறிப்பிடுவாரா என்பதையும்;

      (ii) 2000 - 2017 வரை உலகளாவிய ஏற்றுமதிச் சந்தையில் இலங்கையின் பங்களிப்பு ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாது என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks