E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0211/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 211/ '18

      கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ (i) எவரேனும் ஆள் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை பெறுவதற்கு உரித்துடையவர் எனத் தீர்மானிப்பதற்கான தகவல்கள் உள்ளடங்கிய சுற்றுநிருபம், ஒழுங்குவிதி அல்லது அமைச்சரவை தீர்மானம் ஏதும் இருப்பின் அவை யாவை என்தையும்;

      (ii) சனாதிபதி சட்டவாக்கச் சபை உறுப்பினர்கள், சட்டவாக்கசபையால் நியமிக்கப்படும் ஆணைக்குழு உறுப்பினர்கள், ஆளுனர்கள், முதலமைச்சர்கள், நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் மற்றும் அந்தப் பதவிகளுக்கு சமனான பதவிகளை வகிப்பவர்கள் அல்லது இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர்ந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கு உரித்துடைய வேறு பதவிகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்குறித்த பதவிகளில் உள்ளடங்காத ஆட்களுக்கு இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) அவ்வாறெனின், அதற்கு ஏதுவான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.பீ. நாவின்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks