பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
226/ '18
கௌவ டக்ளஸ் தேவானந்தா,— மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இரணையாலை மற்றும் ஆனந்தபுரம் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பதையும்;
(ii) மேற்படி மக்கள் அப் பிரதேசங்களில் காணிகளை சுத்தஞ்செய்கையில் பாரியளவில் வெடிபொருட்கள் கிடைத்துள்ளதோடு அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இதனால் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் வெடிபொருட்கள் உள்ளனவென அறிவித்தல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இப்பிரதேசத்தில் வெடிபொருட்களை அகற்றுவதற்காக இன்றளவில் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில் மேற்படி வெடிபொருட்களை முற்றாகவே அகற்றுவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-04
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks